பிரான்ஸில் தொற்றுவீதம் 1.4வீதத்தில் உள்ளது.
#world_news
#Covid 19
#France
Mugunthan Mugunthan
4 years ago
பிரான்ஸில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.புதிதாக 5.879 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொற்று வீதம் இரண்டாவது நாளாக 1.4% வீதத்திலேயே உள்ளது. இதுவரை மொத்தமாக 9 983 601 பேருக்கு தொற்று உறுசெய்யப்பட்டுள்ளது.
296 பேர் இந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 107 பேர் தற்போது இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் 1 586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 72 பேர் புதிதாக இந்த 24மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
49 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 116 397 பேராக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 89 576 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே