பயணிகள், விவசாயிகளுக்கு அலைக்கழிப்பு: மண்முனை பாலம் வீதித்தடைக்கு எதிராக ஜனாதிபதிக்கு தந்தி!
#SriLanka
#LANKA4
#Telegram
#President
#AnuraKumaraDissanayake
#Farmers
#SHELVA
#ADDAPOOJA
Abi
2 months ago
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரிவில் உள்ள மண்முனை பாலத்தடியில் உள்ள போலீஸ் வீதித் தடை அவசியமா ?
இதனை அகற்றித் தருமாறு கொக்கொடிச்சோலை கிளாக்கொடிச்சேனை கமநல அமைப்பின் தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரன் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு அவசர தந்தியை அனுப்பியுள்ளார் .
அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது.. தங்களின் அரசாங்கம் பதவியேற்ற உடன் நாட்டில் உள்ள சில வீதித் தடைகள் முற்றாக நீக்கப்பட்டன.
ஆனால் மண்முனை பாலத்தடியில் உள்ள வீதித்தடை மாத்திரம் இன்றும் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் பலத்த அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.எனவே இதை அகற்றி தருமாறு வேண்டுகின்றோம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே