கனடா பொது தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை!

#world_news #Election #Canada
கனடா பொது தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை!

கனடாவில் நடந்து முடிந்த பொது தேர்தலுக்காக மொத்தம் 610 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது

கனடா வரலாற்றிலேயே மிக அதிக தொகை செலவிடப்பட்ட தேர்தலும் இது தான் என கூறப்படுகிறது. மட்டுமின்றி 2019 பொது தேர்தலை விடவும் 100 மில்லியன் டொலர் அதிகமாகவும் செலவாகியுள்ளது.

இவ்வளவு பெருந்தொகை செலவிட்டு தேர்தல் முன்னெடுப்பது உண்மையில் மக்களுக்கு பயனளிக்குமா என்ற கேள்வியும் தற்போது பரவலாக எழுந்துள்ளது.

ஆனால், பூர்வக்குடி அமைப்புகள் அனைத்தும், தேர்தலே தேவையற்றது எனவும், தேர்தலுக்காக செலவிடும் இந்த பெருந்தொகையை சுத்தமான குடிநீருக்காகவும், உளவியல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க திட்டங்களுக்காகவும் பயன்படுத்தலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே கருத்தையே, சிறார் நல அமைப்புகளும் முன்வைத்துள்ளன. சிறார் நலனுக்காக நாளுக்கு 10 டொலர் என செலவிட்டிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான கனேடியர்களும், தேர்தலுக்காக செலவிடப்பட்டுள்ள இந்த தொகையை பெருந்தொற்றில் இருந்து மீள மக்களுக்கு உதவும் வகையில் செலவிட்டிருக்கலாம் என்ற கருத்தையே முன்வைத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4