பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை!

#SriLanka #Murder
Yuga
4 years ago
பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை!

நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரியம்ப, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பொல்லால் மற்றைய நபரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

தம்பெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4