பிரான்ஸில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

#world_news
பிரான்ஸில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிரான்ஸில் அடை மழையும் அதனால் வெள்ள அபாயமும் வரும் தினங்களில் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடை மழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Drôme மற்றும் Ardèche ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, Gard மற்றும் Hérault ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னல் மிக தீவிரமாக இருக்கும் எனவும், இங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சி மையமான Météo-France தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4