IPL Match36-ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், பிரித்வி ஷா களமிறங்கினர். ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் இருவரும் தடுமாறினர். தவான் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தியாகி பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்த ஓவரில் பிரித்வி ஷா சக்காரியா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
21 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 83 ரன்கள் இருக்கும் போது ரிஷப் பண்ட் 24(24 பந்துகள்) ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய அய்யர் 43 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் என்ற முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹேட்மயர் 28, அக்ஷர் படேல் 12 என விக்கெட்டுகளை இழந்தனர். லலித் யாதவ் 14 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.