இலங்கையில் பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி யாருக்கு செலுத்தப்படும்?

#SriLanka #Covid Vaccine
Yuga
4 years ago
இலங்கையில் பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி யாருக்கு செலுத்தப்படும்?

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மாத்திரமே பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி இராணுவத்தினால் செலுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டுமாயின், உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் அவர் கூறுகின்றார்.

அதைவிடுத்து, உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாராஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, வைத்தியசாலை வளாகத்தில் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் (25) ஒன்று திரண்டிருந்தனர்.

எனினும், உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படாது என கூறிய நிலையில், இராணுவ வைத்தியசாலைக்கு முன்பாக மாணவர்கள் நேற்று அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4