யாழில் பெண்கள், சிறுவர் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் சரோஜா சாவித்திரி தலைமையில் விசேட மீளாய்வு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், எதிர்காலத் திட்டமிடல் மற்றும் நிலவும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான தோழர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கல்வித் துறை அதிகாரிகள், பெண் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள், சிறுவர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களும் மீளாய்வு செய்யப்பட்டன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே