முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு பழையமாணவர்களால் வழங்கப்பட்ட உதவிப்பொருட்கள்

Nila
4 years ago
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு பழையமாணவர்களால் வழங்கப்பட்ட உதவிப்பொருட்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் தற்போது கல்வி மாணவர்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.

99 கலைப்பிரிவு பழைய மாணவர்களால் இணைந்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் தற்போது கல்வி கற்கும் தற்கால சூழலினால் வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கு உணவுப் பொருட் தொகுதிகளைக் கையளித்துள்ளனர்.

இவ் உதவிப் பொருட்கள் 99 கலைப்பிரிவு வகுப்பாசிரியர் சர்மா ஆசிரியரால் இன்று வழங்கப்பட்டது.

இதற்கான நிதியினை புதுக்குடியிருப்பு மத்தியில் 1999 கலைப்பிரிவில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர் .

தற்போது நாட்டில் நிலவுகின்ற பெருந்தொற்று நிலையில் தொடர் முடக்கம் காரணமாக வருமானமின்றிப் பல குடும்பங்கள் தவிக்கின்றன. திடீரென அதிகரித்துள்ள விலைவாசி அவர்களின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை இலக்காகக் கொண்டு ரூபா 2500   அளவிலான தொகைக்கு உணவுப் பொதி தயார் செய்து கலைப்பிரிவு(99) நண்பர்கள் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4