மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

#Accident #Death
Prasu
4 years ago
மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

மொரட்டுவை, எகடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதி, எகொடஉயன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், இன்று இடம்பெற்ற விபத்தில், ஒருவர் மரணமடைந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் எகடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4