ஓமான் பாலைவனத்தில் உள்ள மர்மக்குழிக்குள் காணப்படும் அதிர்ச்சி - திகைக்கும் ஆய்வாளர்கள்!

Prasu
4 years ago
ஓமான் பாலைவனத்தில் உள்ள  மர்மக்குழிக்குள் காணப்படும் அதிர்ச்சி - திகைக்கும் ஆய்வாளர்கள்!

 ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது 'பர்ஹட்டின் கிணறு' என்று அழைக்கப்படும் மர்மக் குழி, 367 அடி ஆழமும், 30 மீட்டர் விட்டமும் கொண்டது. மேலும், விசித்திரமான வட்டமான‌ நுழை வாயிலையும் கொண்டுள்ளது. வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும்.

இதனை 'நரகத்தின் கிணறு' என்றும், இதில் பூதம் இருப்பதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்து இருந்து வந்தது. மேலும், இது கடுமையான துர்நாற்றத்தையும் வீசி வந்தது. இதனால், ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள் குழு, இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக‌ இறங்கினர்.

அந்த மர்மக்குழியின் உள்ளே நீண்ட குகை போன்று காணப்பட்டது, அதோடு உள்ளே சினிமா காட்சிகளில் காட்டப்படுவது போன்று அழகிய‌ நீர் வீழ்ச்சியும் தென்பட்டது. அதுமட்டுமல்லாது,அங்கு ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்தன. இவை அங்கு சென்ற ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

நீண்ட காலமாக நிலவி வரும் மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'இந்த மர்ம குழியில் எந்த பூதமும் இல்லை. ஏமனின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளுக்கான இடமாக இது திகழும். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த மர்மக்குழி உருவாகி இருக்கலாம். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும்,' என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4