கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சுற்றறிக்கை ஒக்டோபர் 1 இல்! - இரவில் ஊரடங்கைத் தொடரவும் ஆராய்வு

#SriLanka
Prasu
4 years ago
கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சுற்றறிக்கை ஒக்டோபர் 1 இல்! - இரவில் ஊரடங்கைத் தொடரவும் ஆராய்வு

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட அசேல குணவர்த்த வெளியிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் விழாக்களை வீடுகளில் மட்டுமே நடத்த அனுமதிக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் மூலம் இறுதிச் சடங்குகள் மற்றும் பல பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒக்டோபர் முதலாம் திகதி நாடு மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாட்டை மீண்டும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறியமுடிந்தது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4