மட்டக்களப்பில் மீனவர்களின் வலையில் சிக்கிய  மோட்டார் குண்டு

#Batticaloa
Prathees
4 years ago
மட்டக்களப்பில் மீனவர்களின் வலையில் சிக்கிய  மோட்டார் குண்டு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில்   நேற்று  மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாலம் அமைந்துள்ள பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் இக்குண்டு   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து  பொலிஸார்,விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த மோட்டார்   குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் குறிப்பட்டனர் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4