சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்யப்போகும் இலங்கை அரசாங்கம்

#SriLanka #government #China
Yuga
3 years ago
சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்யப்போகும் இலங்கை அரசாங்கம்

இயற்கை உரம் எனக் கூறி 63 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள ‘சீன குப்பை’ களின் இறக்குமதியை உடன் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் மாநகராட்சி கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நச்சு பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தை சீனாவில் உள்ள கிங்டாவோ என்ற நிறுவனம் மூலம் அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.

இந்த உரம் நமது பயிர்களுக்கும் நமது நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் பல நுண்ணுயிர்களைக் கொண்டிருப்பதால்,பெரும் ஆபத்து உள்ளது.

சீனக் குப்பைகளை இறக்குமதி செய்யக்கூடாது என்று நாட்டின் வல்லுநர்கள் பலரும் வலியுறுத்திய போதிலும்,அரசாங்கம் எந்த அடிப்படையில் அவற்றை இறக்குமதி செய்யப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!