இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறைகள் இல்லை!

#SriLanka #School
Yuga
4 years ago
இலங்கையில்  பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறைகள் இல்லை!

ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசெம்பர் மாத விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4