தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 344 பேர் கைது!

Prabha Praneetha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 344 பேர் கைது!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 344 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த குற்றச்சாட்டில் 134 வாகனங்களில் பயணித்த 242 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4