கனடாவில் வாழ்ந்து வந்த இலங்கைப் பாடகர் கொவிட் தொற்றால் பலி!

#world_news
கனடாவில் வாழ்ந்து வந்த இலங்கைப் பாடகர் கொவிட் தொற்றால் பலி!

புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் பாடகரான இசைக் கலை மாமணி வர்ண ராமேஸ்வரன் கனடாவில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்., இசைக் கலை மாமணி வர்ண ராமேஸ்வரன் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்து மீண்டும் கனடா திரும்பிய நிலையிலேயே அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூரில் பிறந்த இவர், பின் யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4