பருத்தித்துறை வைத்தியசாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு! (photo)

#Hospital
Yuga
4 years ago
பருத்தித்துறை வைத்தியசாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு! (photo)

பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபுறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் இன்று புறக்கணிப்பை மேற்கொண்டனர். 44 தொழில் சங்கங்களும் இணைந்து இந்த தொழில் சங்கப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டடம் மேற்கொள்ளப்பட்டது.  

ஆயினும், பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு இடையூறு எதுவும் இன்றியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4