திருமண புரோபஸலை நிராகரித்து ‘நான் விற்பனைக்கு அல்ல’ என ரிப்ளை கொடுத்த பிரேசில் மாடல்!

Keerthi
4 years ago
திருமண புரோபஸலை நிராகரித்து ‘நான் விற்பனைக்கு அல்ல’ என ரிப்ளை கொடுத்த பிரேசில் மாடல்!

பிரேசில் நாட்டில் உள்ள Sao Paulo நகரை சேர்ந்தவர் கிறிஸ் கலேரா. 33 வயதான மாடல் அழகியான அவர் தனக்கு தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் உலக மீடியாக்களில் அவர் வைரல் செய்தியானார். 

ஆண்களுடனான கசப்பான அனுபவம் தன்னை இந்த முடிவுக்கு தள்ளியதாகவும், தனக்கு தானே துணை என்பதை உலகிற்கு வெளிப்படுத்த இதை செய்துள்ளதாகவும், இணையரின் துணையின்றி தன்னால் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வழக்கமான பாணியில் தேவாலயத்தில் மணப்பெண் ஆடையில் சென்ற அவர் அங்கு திருமணம் செய்து கொண்டு, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் அவர். 

அந்த படங்களுக்கு பலரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளையும் குவித்தனர். இந்த நிலையில் அரப் ஷேக் என்ற பயனர் ‘உங்களை நீங்களே விவாகரத்து செய்து கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு நான் 3 கோடி ரூபாய் டவுரி தருகிறேன்’ என சொல்லி உள்ளார். நூதன முறையில் அந்த நபர் கிறிஸ் கலேராவிடம் தனது திருமண புரோபஸலை வைத்துள்ளார்.  

‘நான் விற்பனைக்கு அல்ல’ என ரிப்ளை கொடுத்துள்ளார் கிறிஸ். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4