சட்டவிரோதமாக 220 மில்லியன் ரூபா தங்கத்தை கடத்திய இருவர் கைது

#Arrest #Airport
Prathees
4 years ago
சட்டவிரோதமாக 220 மில்லியன் ரூபா தங்கத்தை கடத்திய இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 220 மில்லியன் மதிப்புள்ள 16 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தங்கம் போலி விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம்  துபாய்லிருந்து  இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் கோப்பி தயாரிக்கும் இயந்திரப் பாகங்கள் கொண்டு வரும் போர்வையில்  குறித்த தங்கம் இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளதாக  சுங்கத் திணைக்களத்தின்  ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4