கட்டுநாயக்க விமான நிலையத்தில் 15 மணித்தியாலங்கள் காத்திருக்கும் பயணிகள்!

#SriLanka #Airport
Yuga
4 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 15 மணித்தியாலங்கள் காத்திருக்கும் பயணிகள்!

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பிசிஆர் ஆய்வகத்தின் தொழில்நுட்பப் பணிகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பே திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கடந்த இரண்டு நாட்களில் ஆய்வகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிசிஆர் சோதனை அறிக்கைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக நெத் செய்தி வெளியிட்டுள்ளது.

PCR பரிசோதனை அறிக்கைகள் 3 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினாலும், சில பயணிகள் சுமார் 15 மணி நேரம் விமான நிலையத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பல வெளிநாட்டு பயணிகள் பயணிகள் தங்கள் பிசிஆர் சோதனை அறிக்கைகள் வெளியாகும் வரை மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4