IPL Match42 - பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச தீர்மானம்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கடந்த போட்டிகளில் கடுமையாக சொதப்பிய இஷான் கிஷன் இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சவுரவ் திவாரி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ஆடம் மில்னே நீக்கப்பட்டு அவருக்கு பதிலான நாதன் கவுட்டர் நைல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. மாயன்க் அகர்வால் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக மந்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி;
- ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, க்ரூணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, நாதன் கவுட்டர் நைல், ராகுல் சாஹர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், டிரண்ட் பவுல்ட்.
பஞ்சாப் கிங்ஸ் அணி;
- கே.எல் ராகுல், மந்தீப் சிங், கிரிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்ப்ரீட் பிரார், நாதன் எலீஸ், முகமது ஷமி, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங்.