500 கிலோ எடையில் மெகா சைஸ் மாலை.. நிராகரித்த மூத்த அமைச்சர்.. விழா ஏற்பட்டாளர்கள் அதிர்ச்சி..!

Keerthi
2 years ago
500 கிலோ எடையில் மெகா சைஸ் மாலை.. நிராகரித்த மூத்த அமைச்சர்.. விழா ஏற்பட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருச்சியில் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 

திருச்சியில் 500 கிலோ எடையில் மெகா சைஸ் மாலையை அமைச்சர் கே.என்.நேரு ஏற்க மறுத்துவிட்டதால் விழா ஏற்பட்டாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். 

திருச்சியில் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள், நேருவை வரவேற்க 1 லட்சம் ரூபாய் செலவில், 500 கிலோ பூக்கள் மற்றும் கயிறு மூலம் கருப்பு, சிவப்பில் மெகா சைஸ் மாலை தயாரித்தனர். அதை ஆட்களால் தூக்க முடியாது என்பதால், கிரேன் மூலம் மாலையை தூக்கி நிறுத்தி இருந்தனர்.

அப்போது, விழாவுக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்பதற்காக விழா ஏற்பட்டாளர்கள் மெகா சைஸ் மாலையை அணிவிக்க வந்தனர். இந்த ஆடம்பரத்தை தவிர்த்து விட்டு விழா மேடைக்கு சென்றார். அமைச்சர்களுக்கு ஆடம்பரமாக மாலைகள், சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார். 

இதனால், மெகா சைஸ் மாலை போட்டு, அமைச்சரை குளிர்விக்க நினைத்திருந்த விழா ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த மாலை, அங்கேயே கிரேனில் ஏற்றப்பட்ட நிலையில் சில மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்க பேனர்கள், கட்-அவுட்கள் போன்ற ஆடம்பரம் இருக்கக்கூடாது என்று கட்சியினருக்கும், அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.