IPL Match43 - றோயல்ஸை 07 விக்கெட்களால் வீழ்த்திய ராயல்

Prasu
3 years ago
IPL Match43  - றோயல்ஸை 07 விக்கெட்களால்  வீழ்த்திய ராயல்

2021 ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் துபாய் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில், 149 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி. வெற்றிகரமாக இலக்கை சேஸ் செய்துள்ள பெங்களூரு அணி, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொண்டுள்ளது.

இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய விராட் கோலி, படிக்கல் ஆகியோர் ஓரளவு சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர். பவர்ப்ளே ஓவர்களில் ரன் சேர்த்த அவர்கள், 6, 7 ஓவர்களில் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத், 44 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்து 50 ரன்கள் சேர்த்தார். கிட்டத்தட்ட 10 ஓவர்களுக்கு களத்தில் நின்ற இந்த இணை, அணியின் ஸ்கோரை 120+ கொண்டு சென்றனர்.

ராஜஸ்தான் பவுலர்களைப் பொருத்தவரை, முஸ்தாபிசுர் ரகுமான் மட்டும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மற்ற பெளலர்களில் மோரீஸ் ரன்களை வாரி வழங்கினார். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி போட்டியை வென்றது.

முதலில் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு எவின் லூயிஸ், ஜேஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினார். அதிரடியாக தொடங்கிய இந்த இணை சிக்சர்களை தெறிக்கவிட்டனர். இதனால், 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்று நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தது இந்த இணை. ஆனால், 9வது ஓவரில் கிறிஸ்டியன் தந்த ப்ரேக் - த்ரூவால் முதல் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணிக்கு, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது.

அதில் இருந்து, ஒவ்வொரு ஓவருக்கு ஒரு முக்கிய வீரர் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடி வந்த எவின் லூயிஸ், லோம்ரோர், சஞ்சு சாம்சன், ராகுல் தெவாத்தியா, லியம் லிவிங்ஸ்டன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோரீஸ், ரியான் பராக் இணை கடைசி ஓவர்களில் ரன் சேர்த்தனர். ஆனால், டெத் ஓவர் வீச வந்த ஹாட் - ட்ரிக் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் பட்டேல், இந்த போட்டியில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து ரியான், மோரீஸின் விக்கெட்டுகளை எடுத்தார். இதனால், 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது ராஜஸ்தான்.

பெங்களூரு அணி பெளலர்களைப் பொருத்தவரை ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், சஹால், ஷபாஸ் அகமது, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!