வடிகானுக்குள் இருந்து மீட்கப்பட்ட தொழிலதிபரின் சடலம்

#Death #Investigation #Police
Prathees
4 years ago
வடிகானுக்குள்  இருந்து   மீட்கப்பட்ட தொழிலதிபரின்  சடலம்

கொழும்பு மாவட்டத்தில் ஹோகந்தர மற்றும் சிங்கபுரத்திற்கு  இடையே உள்ள வீதியில் வடிகான்  ஒன்றில்  ஆணெருவரின்  சடலம் தலங்கம பொலிஸாரால் நேற்று (29) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு   சடலமாக  மீட்கபப்பட்டவர்  ஹோகந்தரவில் வசிக்கும்  தொழிலதிபர் தேவமுல்லாகே பிரசன்ன  பிரபாத் பெரேரா (46)  .என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரும் மற்றொரு நண்பரும்  கடந்த  28 ம் திகதி இரவு தலவத்துகொடவில் உள்ள உணவகத்திற்கு வாடகை காரில் சென்றுள்ளனர்.

இரவு 10.00 மணியளவில் வேறொருவரின் மோட்டார் சைக்கிளில்  வீட்டிற்குச் சென்றதாக  அவரது நண்பபர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வீட்டுக்குச் செல்லும் வீதியில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியபோது விபத்தில் சிக்கினாரா அல்லது  கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தொழிலதிபருக்கு சொந்தமான சுமார் .1.5 மில்லியன் மதிப்புபள்ள  கையடக்கத் தொலைபேசியை சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள  புதரில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தலங்கம பொலஸார்  இது தொடர்பான மேலதிக வவிசாரணைகளை மேற்காண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4