சோகத்தில் முடிந்த உலகக் கோப்பை கொண்டாட்டம் - மூவர் உயிரிழப்பு
#Death
#Lanka4
#WorldCup
#football
#celebration
#Ecuador
#L4
Prasu
1 hour ago
மெக்சிகோ நகரத்தில் நடந்த உலகக் கோப்பை கொண்டாட்டங்களின் போது மூச்சுத்திணறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈக்வடார் அணிக்கு எதிரான 2-0 என்ற கோல் கணக்கிலான வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் கூட்டம் நகருக்குள் திரண்டதால், 48 வயதுப் பெண் ஒருவரும், 44 வயது ஆண் ஒருவரும் 19 வயதுப் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தலைநகரின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
1986ம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் முதல் உலகக் கோப்பை நாக்-அவுட் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள், முக்கியமாக நகரின் மையப்பகுதியில் உள்ள சுதந்திர தேவதை நினைவுச்சின்னத்தைச் சுற்றி, வீதிகளில் திரண்டதாக நகர அரசு தெரிவித்தது.
இந்நிலையில், நகர மேயர் கிளாரா ப்ருகடா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது "மனமார்ந்த இரங்கலை" தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே