பிரிட்டனில் தீவிரமடையும் பெட்ரோல் தட்டுப்பாடு - காத்திருந்த ரொனால்டோவின் வாகனம்

Prasu
4 years ago
பிரிட்டனில் தீவிரமடையும் பெட்ரோல் தட்டுப்பாடு - காத்திருந்த ரொனால்டோவின் வாகனம்

பிரிட்டனில் கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஓட்டுனர் பல மணி நேரங்களாக பெட்ரோலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ வசிக்கும் பகுதிக்கு சுமார் ஒரு மைல் தூரத்தில் அவரின் வாகன ஓட்டுனர், 2, 20,000 பவுண்டுகள் மதிப்பு கொண்ட பென்ட்லி காருடன் எரிபொருளுக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார்.

மேலும், ரொனால்டோவின் பாதுகாப்பு படையினரும், மற்றொரு காரில் அங்கு காத்திருந்துள்ளனர். அதாவது, அவரின் ஓட்டுநர், மதிய நேரம் சுமார் 2:20 மணிக்கு வாகனத்துடன் எரிபொருள் நிரப்ப வந்திருக்கிறார். அவர், இரவு சுமார் ஒன்பது மணியளவில் தான் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரங்களாக காத்திருந்தும், அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

நாட்டில், அதிக வசதி வாய்ப்புகள் இருக்கும் ரொனால்டோவும், நடுத்தர மக்கள் போன்று பெட்ரோலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் பாதுகாப்பு படையினரும், பெட்ரோல் நிரப்ப பல மணி நேரங்களாக காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4