போதையில் மகளைத் தாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் மறியல்!

#Colombo #Court Order #Prison
Prathees
4 years ago
போதையில் மகளைத் தாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் மறியல்!

மதுபோதையில் தனது மகளைக் கடுமையாக தாக்கிய தந்தையை, எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தை, பாமன்கடை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் தினமும் வீட்டுக்குச் செல்லும் நபர், தனது மூன்று பிள்ளைகள் மீது தாக்குதல் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 17 வயது மகள், இது குறித்து வெள்ளவத்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்துவதுத் தொடர்பில் ஏற்கனவே பலமுறை பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் குறித்த நபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரிக்கை செய்து விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4