பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஜோடிக்கு சிறை

#Court Order #Prison
Prathees
4 years ago
பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஜோடிக்கு சிறை

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளில்  ஈடுபட்டு, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட  இளம் ஜோடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்  அவ்விருவரும் ஆஜராகியபோதே, தலா 10 ஆயிரத்து 800 ரூபாவும் நான்கு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

மஹ​ரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி  கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் பஹந்துடாவா நீர்வீழ்ச்சிக்கு கீ​​ழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.  

இது தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4