சுவிட்சர்லாந்தும் அமெரிக்காவும் மூலோபாய கூட்டு பற்றி பேச்சுவார்த்தை.

#world_news
சுவிட்சர்லாந்தும் அமெரிக்காவும் மூலோபாய கூட்டு பற்றி பேச்சுவார்த்தை.

அறிவியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் சுவிற்சலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் முதல் மூலோபாய கூட்டு உரையாடலின் மையக்கருத்தாக இருந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிகழ்வுகள் விவாதிக்கப்பட்டுள்ளது.

பெர்னில். வெள்ளிக்கிழமை வெளியுறவு அமைச்சர் லிவியா லியு மற்றும் அமெரிக்க துணை வெளியறுவு அமைச்சர் வெண்டி ஷெர்மன் இடையேயான பேச்சுவார்த்தை இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்று காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு, குறித்து கவனம் செலுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

மனித உரிமைகள் பணியில் தடைகள் கொள்கை மற்றும் வலுப்படுத்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

லியு மற்றும் ஷெர்மன் இரு நாடுகளும் பேணிவரும் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டி, அவற்றை வலுப்படுத்தும் வழிகளை அடையாளம் கண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இத்துடன் அமெரிக்கா சார்பாக ஈரானில் சுவிற்சலாந்தின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் அலசப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4