சுவிஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற அனுசரணையில் கிளிநொச்சி செஞ்சிலுவைச்சங்கத்தின் மனிதநேயப்பணி (Photos)

#Kilinochchi #Swiss University #Tamil Student
Reha
4 years ago
சுவிஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற அனுசரணையில் கிளிநொச்சி செஞ்சிலுவைச்சங்கத்தின் மனிதநேயப்பணி (Photos)

இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சுவிஸ் பல்கலைக்கழகதமிழ் மாணவர் மன்ற நிதியுதவியுடன் மற்றுமொரு செயற்றிட்டமாக கிளிநொச்சி விசேட தேவையுடையோர் வலையமைப்பு சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு அவசரமான அத்தியாவசிய சுகாதார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் த.சேதுபதி செயலாளர் க.திருலோகமூர்த்தி பொருளாளர் பொ.பத்மகாந்தன் உறுப்பினர் செ.சிவகுருநாதன் கிளைநிறைவேற்று அலுவலர் செ.பிரகாஸ் அவர்களும் சிறுவர் பராமரிப்பு இல்ல தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளார் அவர்களும். இயக்குநர் டானியல் மற்றும் தொண்டர்களும் கலந்து சிறப்பித்தனர்.சிறுவர் தினத்தை சிறப்பிக்க சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4