ஒரு கிலோ பால் பால்மா  ரூ .1145 ஆக உயர்வு?

#SriLanka
Prathees
3 years ago
ஒரு கிலோ பால் பால்மா  ரூ .1145 ஆக உயர்வு?

ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் சந்தை விலை ரூ 1,145 ஆக மேலும் உயரும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். 

மேலும் அடுத்த வாரத்திற்குள் பால் மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் துறைமுகத்தில் சிக்கியிருக்கும் பால்மா தொகையினை வெளியிடுவதற்கு இன்னும் டொலர் பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 80,000 டன் இறக்குமதி செய்கிறோம்.

துறைமுகத்தில் எங்களுடைய  சுமார் 300,000 கிலோ பால்மா சிக்கியுள்ளன. ஏனைய சங்கங்களின் பால்மா பகுதி பகுதிகளாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, பால்மா இறக்குமதி செய்யப்பட வேண்டும். எங்கள் நிறுவனமும் மற்ற நிறுவனங்களும் இதைச் செய்ய வேண்டும். 

இப்போது பழைய பில்கள் செலுத்தப்படும் வரை அந்த நாடுகளில் இருந்து ஆர்டர்கள் செயல்படுத்தப்படாது.

நிலுவை உள்ளது செலுத்த வேண்டும். அதை செலுத்திய பிறகு, நம் நாட்டில் உள்ள அனைத்து பால்மா  விலையிலும் திருத்தத்திற்கு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!