சிறைக்கைதிகளை  பார்வையிட ஒக்டோபர்-4 முதல் அனுமதி

#Prison
Prathees
4 years ago
சிறைக்கைதிகளை  பார்வையிட ஒக்டோபர்-4 முதல் அனுமதி

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல்  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட்  பரவல் காரணமாக கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4