இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிய கும்பல்!

Prasu
4 years ago
இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிய கும்பல்!

வன்முறைக்கு தயாரான கும்பல் ஒன்று இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், புத்தூர், ஆவரங்கால் வடக்கு பகுதியில் நேற்று (01) மாலை இடப்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குழுவொன்று மோதல் சம்பவம் ஒன்று தயாராக இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் சென்று இருந்தனர்.

இராணுவத்தினரை கண்டதும் கும்பல் தம்மிடம் இருந்த ஆயுதங்களை வீசி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால், அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் வீசப்பட்ட ஆயுதங்களை மீட்டதுடன், 6 மோட்டார் சைக்கிளில் 12 க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் கூடி நின்றதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4