IPL Match47 - சென்னை உடனான போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்
Prasu
3 years ago
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது
அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 2 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:
- டுபெலிசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, ரெய்னா, ராயுடு, சாம் கரன், ஷர்துல் தாகூர், ஆசிப், ஹசில்வுட், ஜடேஜா, எம்எஸ் டோனி.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
- எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஆகாஷ் சிங், துபே, பிலிப்ஸ், ராகுல் டெவாட்டியா, மில்லர், சேத்தன் சகாரியா, மயங் மார்கண்டே முஸ்டாபிஜுர் ரஹ்மான்.