யாழில் மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்ட 24 நாட்களான குழந்தை கொரோனாவால் பலி

#Jaffna #Covid 19 #Death
Yuga
4 years ago
யாழில் மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்ட 24 நாட்களான குழந்தை கொரோனாவால் பலி

மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 24 நாட்களான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த பெண் குழந்தை கடந்த வியாழக்கிழமை(30) மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டபோது குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து இறந்த குழந்தைக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4