கொழும்பு துறைமுகத்திற்கு அவசரமாக வந்த சிங்கபூர் கப்பல் !

#SriLanka
Yuga
4 years ago
கொழும்பு துறைமுகத்திற்கு அவசரமாக வந்த சிங்கபூர் கப்பல் !

சுத்திகரிப்பு பொருட்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய கொள்கலனில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக சிங்கப்பூர் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து கடந்த 25 ஆம் திகதி  பயணத்தை ஆரம்பித்த தலாசா பெட்ரஸ் எனப்படும் குறித்த கப்பல் இன்று (03) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சேதமடைந்த கொள்கலனை அகற்றி அதைச் சரிசெய்த பின்னர் கப்பல் மீண்டும் துறைமுகத்தை விட்டு வெளியேறும் எனக் கொழும்பு துறைமுக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சுயஸ் கால்வாய் வழியாகப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு வரத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4