இலங்கையில் அமுலிலுள்ள கொரோனாக் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!

#SriLanka #Shavendra Silva
Yuga
4 years ago
இலங்கையில் அமுலிலுள்ள  கொரோனாக் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!

நாட்டில் கொரோனாக் கட்டுப்பாட்டிற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் நீக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் சுகாதார சட்டங்களுக்கமைய செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மக்கள் சுகாதார சட்டங்களை சரியான முறையில் செயற்பட்டால் நாட்டின் கொரோனாத் தொற்று நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையான ஒழித்து விட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4