ஈபிடிபி உறுப்பினருக்கு துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த பொலிஸார் - யாழில் பரபரப்பு

#Police #Jaffna
Nila
4 years ago
ஈபிடிபி உறுப்பினருக்கு துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த பொலிஸார் - யாழில் பரபரப்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் பொலிஸார் வானத்தை நோக்கிச் சூடு நடத்தி எச்சரித்தனர்.

இந்தச் சம்பவம் ஊரெழு பகுதியில் றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது. ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர்.

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்டபோது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டார்.

அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈ.பி.டி.பி. கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு
விளைவிப்பவர் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4