திருகோணமலையில் ஹெரோயினுடன் நால்வர் கைது

#Arrest #Trincomalee
Prathees
4 years ago
திருகோணமலையில் ஹெரோயினுடன் நால்வர் கைது

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று ஹெரொயின் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த த 32இ 43இ 22 மற்றும் 26 வயதுடைய நால்வரே 1இ615 மில்லி கிராம்  ஹெரொயினுடன்  கைது செய்யப்பட்டதாக அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஜி.பி.டகம்பத் தெரிவித்தார். 

அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு 1இ615 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும்  தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4