சுவிற்சலாந்தில் பெரும்பாலானோருக்கு விரைவில் உடலில் கொவிட் எதிருடலிகள் இருக்கும்.

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் பெரும்பாலானோருக்கு விரைவில் உடலில் கொவிட் எதிருடலிகள் இருக்கும்.

சுவிற்சலாந்தில் கிட்டத்தட்ட 80 சதவீத பெரியவர்கள் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சூரிச் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திட்டமான கொரோனா இம்யுனிடாஸின் தரவின் அடிப்படையில், நாட்டில் தொற்று நோய் பரவுதல் மற்றும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

அதே வேளை நாங்கள் முழுசுவிற்சலாந்தையும் கணக்கில் எடுத்தால் விரைவில் 75-80 சதவீதம் சீரியலோஜிக்கல் பாதிப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மிலோ புஹான் கூறினார்.

எதிருடலிகள் பார்வையில் சுவிற்சலாந்தின் நிலைமை மிகவும் ஊக்கமளிக்கிறது என்று தொற்று நோயியல் நிபுணர் மார்செல் டேனர் கூறினார்.

இருப்பினும், டேனரின் கூற்றுப்படி, இரத்தத்தில் எதிருடலிகள் உள்ளவர்கள் அனைவரும் ஒரே அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல. அதாவது நோயிலிருந்து மீண்டவர்களை விட தடுப்பூசி போடப்பட்டவர்கள் கோவிட் எதிராக சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4