பிக்பாஸை கடுமையாக விமர்சித்தவர் - இப்பொழுது பிக்பாஸ் வீட்டில்!

Prabha Praneetha
4 years ago
பிக்பாஸை கடுமையாக விமர்சித்தவர் - இப்பொழுது பிக்பாஸ் வீட்டில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடுமையாக விமரிசிக்கும் அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த முறை பெரும்பாலான போட்டியாளர்கள் புதியவர்கள்.

இதனால் ஆரம்பத்தில் மக்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக இருக்கிறது.

இந்த சீசனில் யூடியூபில் சினிமா விமரிசனம் செய்யும் அபிஷேக் ராஜா கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக விமரிசிக்கும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில், ´´என் கண்ணால் காண்பதைக் கூட நம்ப முடியவில்லை. ஊருக்கே தெரியும் உங்களைக் கேமரா கொண்டு படம்பிடிக்கிறார்கள் என்று.

ஆனால், கிடைத்த நூறு நாட்களில் நீங்கள் முதல்வராக செய்யும் வேலை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. கேட்டால் பிக்பாஸ் என்கிறார்கள்´´ என்று கடுமையாக விமரிசிக்கிறார்.

இதில், நீங்கள் முதல்வராக செய்யும் வேலை என கமல்ஹாசனை அவர் விமரிசிப்பதாகவும் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமரிசித்துவிட்டு பின்பு ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றீர்கள் என அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமரிசித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4