ஆரம்பித்த முதல் சண்டை: அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு! வீடியோ

Yuga
4 years ago
ஆரம்பித்த முதல் சண்டை: அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு!  வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் ஒரு சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதும் அதன் பின் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அணி அணியாகப் பிரிந்து சண்டை போடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது என்பதை கடந்த நான்கு சீசன்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த ஐந்தாவது சீசனில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளே பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பித்துவிட்டது என்பது இன்றைய முதல் புரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களது சொந்த கதையை கூறி வரும் நிலையில் இமான் அண்ணாச்சி அடுத்ததாக தனது கதையை கூறுகிறார். பிக்பாஸ் டைட்டிலை ஒரு நகைச்சுவை நடிகர் வென்றால் நன்றாக இருக்கும் என்று அவர் தன்னை கூறும்போது, அவரது பேச்சிற்கு சிரித்ததாக நிரூப் மற்றும் சிபிச்சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது.

இந்த நிலையில் நமீதா மாரிமுத்து ’கஷ்டப்படுகிறோம் கஷ்டப்படுகிறோம் என்று யாரும் சொல்ல வேண்டாம், கஷ்டப்பட்டால்தான் நல்ல நிலைக்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். இன்னொரு நிரூப் மற்றும் அபிஷேக் ராஜாவுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. அதே போல் சிபிசக்கரவர்த்தி மீண்டும் ஆவேசமாக, கடைசியில் நமீதா மாரிமுத்து ’வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புறமும் முடிவடைகிறது.

மொத்தத்தில் இன்று சிபிச்சக்கரவர்த்தி மற்றும் நிரூப், நிரூப் மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர்களிடையே காரசாரமான சண்டை நடக்கும் என்பது முதல் புரமோவில் இருந்து தெரியவருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4