நாட்டில் மேலும் 43 பேர் கொரோனாவுக்கு பலி

#Covid 19 #Death #SriLanka
Prasu
4 years ago
நாட்டில்  மேலும் 43 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 05 உயிரிழந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 ஆண்களும் 18 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 36 பேர் ஒக்டோபர் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 522,584 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,326 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4