IPL Match52 - பெங்களூரு அணிக்கு 142 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 52வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இதுவரை நடந்த 12 ஆட்டங்களில் 8ல் வெற்றி, 4ல் தோல்வி என்று 16 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக) உள்ள நிலையில் அவற்றிலும் வெற்றியை சுவைத்து பட்டியலில் முதலிரண்டு இடத்திற்கு முன்னேற்ற தீவிரம் காட்டும். ஏனென்றால், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கு இறுதிப்போட்டியை எட்ட இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
பெங்களூரு அணி அதன் முந்தைய 3 ஆட்டங்களில் மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. அந்த அணியில் மிடில் - ஆடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல் 'ஹாட்ரிக்' அரைசதம் விளாசி நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், அந்த அணியின் முன்னணி வீரர் படிக்கல், கேப்டன் கோலி நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் (12 ஆட்டத்தில் 26 விக்கெட்டுகள்), சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் (14 விக்கெட்) மிரட்டுகிறார்கள். எனவே அந்த அணியின் வெற்றிப்பயணத்துக்கு தடை இருக்காது என நம்பலாம்.
12 ஆட்டங்களில் 2ல் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு சீசனில் பலத்த அடி வாங்கிய அணியாகவும் அந்த அணி உள்ளது. அந்த அணியில் நல்ல திறமையான வீரர்கள் இருந்தாலும் ஒருங்கிணைந்த ஆட்டம் கிளிக் ஆக்காதல் வெற்றி பெற தள்ளாடி வருகிறது. தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வரும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் முடிந்தவரை ஆறுதல் வெற்றி பெற்று பெங்களூரு அணியின் டாப் - 2 கனவை தகர்த்துமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.