இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற அபூர்வமான அறுவை சிகிச்சை

Keerthi
2 years ago
இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற அபூர்வமான அறுவை சிகிச்சை

இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற அபூர்வமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இலங்கையில் முதல் முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வைத்தியசாலை ஒன்று உள்ளது. இங்கு வித்தியாசமான முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சையில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதல் முறையாக வித்தியாசமான முறையில் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்த சிகைச்சையை மேற்கொள்ளும் போது நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அறுவை சிகிச்சையானது உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியிருந்த 5 சென்டி மீட்டர் அளவிலான கல் உட்பட சிறிய அளவிலான கற்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்த சிகிச்சையில் நோயாளியை மயக்கமடைய செய்யாமல் அறுவை சிகிச்சை அளித்தது ஆச்சரியத்தை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!