பேஸ்புக்கை சீண்டிய 'ட்விட்டர்' CEO!

#Facebook #Twitter
Prasu
3 years ago
பேஸ்புக்கை சீண்டிய 'ட்விட்டர்' CEO!

ஃபேஸ்புக் நிறுவனத்தை ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்சி கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் மற்றும் அந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகள் சுமார் 7 மணி நேரம் முடங்கியது.

இது தெரியாத மக்களில் பலபேர் இணையத்தை ஆஃப் செய்து ஆன் செய்து கொண்டும், போனை ரீஸ்டார்ட் செய்தும் வந்தனர். ஒருசிலர் சிம்கார்டை கழற்றி துடைத்து போட்டு பார்த்தனர். இந்த நிலையில், இதற்கு காரணம் மார்க் என சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்கள் உலா வந்தன. இந்த 7 மணி நேர முடக்கதினால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இயங்காத நேரத்தில் அனைத்து இளசுகளும் டிவிட்டர் பக்கம் படையெடுத்தனர். அந்நேரத்தில் #facebookdown என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகியது.

இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தை சீண்டும் வகையில், 'ஃபேஸ்புக் 'இணையதளம் விற்பனைக்கு' என ட்வீட் செய்ய்யப்பட்ட படத்தை பகிர்ந்த ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்சி, அதன் விலை எவ்வளவு? என பதிவிட்டு கேலி செய்துள்ளார்.

இந்த ட்வீட் இதுவரை பல லட்சம் மக்களால் லைக் செய்யபட்டும், ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!