ஆப்கானிஸ்தானில் தொழுகையில் இருந்தவர்கள் மீது குண்டுத் தாக்குதல்

#Afghanistan
Prathees
4 years ago
ஆப்கானிஸ்தானில் தொழுகையில் இருந்தவர்கள் மீது குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தலிபான் தெரிவித்துள்ளது.

ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவ்வபோது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த தாக்குதலை எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

"இன்று பிற்பகல், எங்கள் ஷியா தோழர்களின் மசூதியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது ... இதன் விளைவாக எங்கள் தோழர்கள் பலர் வீரமரணம் அடைந்து, பர் காயமடைந்தனர்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர் என்று AFP செய்தி நிறுவனத்திடம் சுகாதார அதிகாரி சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  நாங்கள் 90 க்கும் மேற்பட்ட காயமடைந்த நோயாளிகளையும் 15 க்கும் மேற்பட்ட இறந்த உடல்களையும் பெற்றுள்ளோம். ஆனால் எண்ணிக்கை மாறும். நாங்கள் இன்னும் அதிகமானவர்களைப் பெறுகிறோம். என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்னார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4