நண்பர்களுடன் நீராடச் சென்ற நபர் சடலமாக மீட்பு

#Police #Death
Prathees
4 years ago
நண்பர்களுடன் நீராடச்  சென்ற நபர் சடலமாக மீட்பு

நண்பர்களுடன் நீராடச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாகொடை கந்தானையை வசிப்பிடமாக கொண்ட 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கறித்தநபர் நேற்று பிற்பகல் நண்பர்கள் மூவருடன் நீராடுவதற்காக  நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த நபர் நீருக்கடியில் இருந்த கற்களுக்கு இடையில் சிக்கி கொண்ட நிலையில், அவரது சடலம் இன்று காலை வெல்லவாய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4