சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்பு-புகையிலை மற்றும் மதுபானங்கள் அதிகார சபை அறிவிப்பு

Prasu
4 years ago
சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்பு-புகையிலை மற்றும் மதுபானங்கள் அதிகார சபை அறிவிப்பு

சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விலை சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு, அது குறித்து விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகரெட்டிற்கான வரிகளை அதிகரிக்க எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இது சேர்க்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிகரெட்டின் விலை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத காரணத்தால் இத்தகைய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4